உங்க நேசத்தை என்னவென்று
unga nesathai ennavendru
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா – 2
உலகத்தின் மாயையிலே தொலைந்திருந்த பாவியென்னை உந்தனின் அன்பாலே கண்டெடுத்தீரே – 2 பாவத்தின் பிடியினிலே சிக்கி நான் மரித்திருந்தேன் உந்தனின் இரத்தத்தினால் மீட்டெடுத்து வாழ செய்தீர் – 2
இயேசப்பா நீங்க பெரியவர் இயேசப்பா நீங்க மகா பரிசுத்தர் – 2
ஞானிகள் வெட்கப்பட பைத்தியமான என்னையுமே உந்தனின் இரக்கத்தாலே தெரிந்து கொண்டீரே – 2 பலவீனமான என்னை கிருபையினால் நிதம் நிறைத்து கனமான பாத்திரமாய் வடிவமைத்தீரே – 2
இயேசப்பா நீங்க நல்லவர் இயேசப்பா நீங்க சர்வ வல்லவர் – 2
தோற்றுப்போன முயற்சிகளில் திரும்ப எனக்கு வெற்றி தந்தீர் மறக்கப்பட்ட ஸ்தலங்களிலே நினைவுபடுத்தினீர் – 2 துரத்தப்பட்ட இடங்களுக்கு மீண்டும் என்னை கொண்டு போனீர் பிடுங்கப்பட்ட ஸ்தானங்களில் நாட்டினீரைய்யா – 2
இயேசப்பா நீங்க அற்புதர் இயேசப்பா நீங்க அதிசயமானவர் – 2