உங்க கூட நடக்கவே
unga kooda nadakkavae
உங்க கூட நடக்கவே நான் விரும்புறேன் உங்களோட வாழவே ஆசைப்படுகிறேன் - 2
உந்தன் அன்பை விட்டு நான் வேறு எங்கு செல்லுவேன்? எந்தன் உயிரை பார்க்கிலும் நான் உம்மை நேசிப்பேன் - 2
இயேசுவே (ஏசய்யா) எந்தன் உயிர்த்துடிப்பும் நீர் தானய்யா ஏசய்யா (இயேசுவே) எனது ஆசையெல்லாம் நீர் தானய்யா - 2
நான் பசியால் வாடும்போது உணவு (எனக்கு) ஊட்டுகிறீர் -2 நான் இருளில் நடக்கும்போது தீபஜோதியாய் வருகிறீர் - 2
கோலும் கையுமாக கடந்து வந்த என்னை - 2 இரண்டு பரிவாரங்களினால் நிரப்பியே அனுப்பினீர் - 2