உங்க கிருபையினால்
unga kirubaiyinaal
உங்க கிருபையினால் இந்த வண்டி ஓடுது உங்க மகிமையினால் என் மனமும் பாடுது
1.இயேசப்பா உம்மைபோல வேறு ஒரு தெய்வமில்லை உமது அன்பைபோல வேறு ஒரு அன்புமில்லே
2.மேடு பள்ளம் தாண்டியே நிற்காமல் செல்கிறது மேசியா இயேசுவை பார்த்து தினம் செல்கிறது
3.ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் செய்கின்றீர் எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கின்றீர்
4.சோதனை நேரத்திலும் சோர்ந்திடாமல் செல்கிறது வேதனையை சாதனையாய் மாற்றிதினம் செல்கிறது
5.காற்று புயல் வந்தாலும் கலங்காமல் செல்கிறது ஊற்றுத் தண்ணீர் பரிசுத்த ஆவியாலே செல்கிறது
6.குறைவான நேரத்திலும் பாடி பாடி செல்கிறது மறையான வேதத்தையே தியானித்து செல்கிறது