உங்க கிருபையால உயிர்
unga kirubaiyaala uyir
உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன் உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2
உங்க கிருபை ஒருபோதும் மாறாதது உங்க கிருபை என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2 உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2
கிருபை மேலான கிருபை என்னை வாழ வச்சது உங்க கிருபை கிருபை மேலான கிருபை என்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை
1. வெட்கப்பட்ட என்னையும் காயப்பட்ட என்னையும் தூக்கி நிறுத்தினிரே – 2 சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி உயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2
2. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியதும் உங்க கிருபைதானே – 2 கசப்பான வாழ்க்கையை மதுரமாய் மாற்றுவதும் உங்க கிருபைதானே – 2
3. வெறும் கையனாய நான் கடந்து வந்தேனே ஆசீர்வத்திதவரே – 2 இரட்டிப்பான நன்மைகளால் என்னையும் நிறைத்து உயர்த்தி வைத்தவரே – 2