உங்க அன்பின்
unga anbin
உங்க அன்பின் அகலம் ஆழம் உணர்ந்து கொள்ளும் போது உள்ளான என் உள்ளம் உறுதியாகின்றது
உயரமானது அகலமானது நீளமானது ஆழமானது உம் அன்பு பெரியது அளவுகள் அற்றது உம் அன்பு என்னை வாழ வைத்ததே
உடைந்து போனதெல்லாம் உம் அன்பால் இணையுமே மரித்து போனதெல்லாம் உம் ஆவியால் எழும்புமே உம் இரத்தத்தால் உம் வார்த்தையால் அழுக்கான இதயம் அழகாகுமே
வேண்டிகொள்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நினைப்பதற்கும் மேலாய் அவர் செய்ய வல்லவராய் இருக்கின்றவர் இருப்பதாலே இருக்கின்றவர் நம்முடன் இருப்பதாலே வேறெந்த அன்பும் பெரிதில்லையே வேறெந்த அன்பும் நிகர் இல்லையே