உந்தன் வேதம்
undhan vedham
உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சியில்லாதிருந்தால் என் துக்கத்தில் நான் அமிழ்ந்து போயிருப்பேன் எங்கள் தேவனே உந்தன் ஆவியினால் வேதம் தந்தீரே ஸ்தோத்திரம் எங்கள் தாய் மொழியில் நான் தியானிக்கவே தமிழில் வந்ததினால் ஸ்தோத்திரம் - உந்தன் வேதம்
நீர் என்னை நம்ப பண்ணின வசனத்தை எனக்காக நினைத்தருளும் அதுவே எந்தன் சிறுமையில் எனக்கு ஆறுதல் இயேசையா உந்தன் வார்த்தை என்னை என்றுமே உயிர்ப்பிக்குமே ஐயா
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான் உந்தன் வார்த்தையின்படியே தன்னை காத்து கொள்வதினால் உந்தன் கிருபை சத்தியத்தை சார்ந்து கொள்வதினால்
படித்தவரும் சுமப்பார் படிக்காதவரும் சுமப்பார் உந்தன் வார்த்தை பேதைகளை ஞானிகளாககிடுமே உந்தன் வேதம் சுமப்பவரை உந்தன் வார்த்தைகள் சுமந்திடுமே