உந்தன் தயவால்
undhan thayavaal
உந்தன் தயவால் நான் வாழ்கிறேன் உந்தன் தயவே என்னைத் தாங்கிடும்
என்னை காக்கும் தயவே அணைக்கும் தயவே எல்லாம் உந்தன் தயவே
யோசேப்பு சிறைச்சாலையில் தேவ தயவை கண்டது போல் -2 வாழ்வில் உயர்வையும் பெருக்கத்தையும் உந்தன் தயவால் நீர் தந்தருளும் – 2
சத்துருக்கள் மத்தியிலும் மோசே தயவை கண்டது போல் – 2 வாழ்வில் கனத்தையும் வெற்றியையும் உந்தன் தயவால் நீர் காணச் செய்யும்
யுத்தத்தின் நெருக்கத்திலும் உந்தன் தயவை கண்டது போல் வாழ்வில் ஜெயத்தையும் பெலத்தையும் உந்தன் தயவால் நீர் பொழியச் செய்யும்