உந்தன் சித்தம் போல
undhan sitham pola
உந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும்
எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே
இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான்
நேர்வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ ம் பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்யமானதுவே
ஏது நலமென்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி
அக்கினி மேகஸ்தம்பங்களில் அடியேனை என்றும் நடத்தி அனுதினமும் கூட இருந்து அப்பனே ஆசீர்வதியும