உந்தன் சன்னதி
undhan sannadhi
உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி என்றென்றும் வாஞ்சிப்பேன் உன் சன்னதி
1. ஆராதனை செய்து ஆனந்தம் கொள்ளுவேன் அருள் நாதர் இயேசுவின் சன்னதியில் - 2 அற்புதர் இயேசு என்றும் என்னோடிருப்பதால் ஆடிப்பாடி தான் ஆராதிப்பேன் - 2
2. கலங்கிடும் வேளையிலும் திகைத்திடும் வேளையிலும் தாங்கிடும் என்னை உந்தன் அன்பு தள்ளாடும் போது தடுமாறும் போதும் காத்திடுமே உன்னை உந்தன் கரம்
3. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் கர்த்தாவே நீரோ மாறாதவர் - 2 கடைசி மட்டும் உந்தன் திரு சன்னதியில் காத்திருந்து என்னை படைத்திடுவேன் - 2