உந்தன் அழகான கண்கள்
undhan azhagaana kangal
உந்தன் அழகான கண்கள் கண்டிடும் வேளை கல்மனமும் என்னில் கரைந்திடுதே உந்தன் நிறைவான அன்பை எண்ணிடும் வேளை என் வாழ்க்கை எல்லாம் மாறிடுதே
எனக்காக எனக்காக பிறந்தீரையா என் பாரமெல்லாமே சுமந்தீரையா எனக்காக எனக்காக உயிர்த்தீரையா மாயையான உலகத்தை ஜெயித்தீரையா
இயேசு இராஜாவே வாரும் வாரும் இயேசு ராஜாவே விரைவே வாரும்
மாயையான உலகம் எனக்கென்றும் வேண்டாமே நிரந்தரமான பரலோகம் போதுமே பரலோகத்தில் உந்தன் சித்தம் போல பூலோகத்திலும் நாங்கள் செய்ய வேண்டும்
குழந்தையைப் போலவே கதருதே என் நெஞ்சம் உந்தன் நினைவிலே என்னை நினைத்திடுமே கொஞ்சம் உம் சித்தம் செய்திட வைத்துக்கொள்ளும் இல்லையென்றால் என்னை எடுத்துக் கொள்ளும