உந்தன் அன்பு ஒன்று போதும்
undhan anbu ondru podhum
உந்தன் அன்பு ஒன்று போதும் உலக அன்பு மாறிப் போகும் கள்ளம் கொண்ட மானிடரில் கர்த்தர் உந்தன் பாதம் தஞ்சம்
1. நேசிக்க யாரும் இல்லை என்று நேசத்திற்காக ஏங்கினேன் உண்மை நேசம் கண்டிடாமல் உள்ளம் உடைந்து நான் நொறுங்கினேன்
2. உலக வாழ்க்கை போதும் என்று பாவத்தின் கோர பிடிதனில் பாதகனாய் வாழ்ந்த என்னை பரமன் இயேசு தேடி வந்தார்
3. தேவாதி தேவன் பாதத்திலே எந்தனை முற்றிலும் ஒப்புவித்தேன் பாவம் நீங்கி தூய வாழ்வு வாழ்ந்திட நல்வழி காட்டினார்
4. அன்பினாலே நிறைந்து உம் பாதத்தில் அனுதினமும் வந்து நிற்பேன் அழிந்து போகும் ஆத்துமாவை அப்பா உம் பாதத்தில் சேர்த்திடுவேன்
5. உயிரோடு எழுந்த தேவன் நீரே ஜீவனை எனக்காய் ஈந்தவரே சிலுவையினால் மீட்டெடுத்து சீஷனாய் என்னை மாற்றீனீரே