உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்தால்
unda veettukku rendagam ninaithaal
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்தால் யூதாஸின் நிலை வருமே மனிதன் தான் வெட்டின குழியில் தானே விழுவானே துரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே -2
1. முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2 உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் இருப்பானே மனிதா -2 வினையை விதைத்தாயே நீதான் வினை அறுப்பாயே -2
2. பாம்பு என்று தெரியாமல் பாலை வார்த்தது தவறல்ல ஓ மனிதா -2 பிராணசினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா -2 காலை தூக்கி நாயே உந்தன் குதிகாலை தூக்கிநாயே -2
3. பாசம் என்றும் நேசம் என்றும் வேஷம் போட்டாயே -2 சந்தர்ப்பவாதி உன்னை தேவன் உன்னில் நிறுத்தியே -2 ஜெபிக்கின்றேன் மனிதா உனக்காய் ஜெபிக்கின்றேன் மனிதா -2