உனக்குள்ளே இருக்கின்ற
unakkulle irukkindra
உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு என்றும் பெரியவரே நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் செய்திடுவார்
1. நம்பிக்கை இல்லா நிலையானதோ விசுவாசம் உன்னில் குறைவானதோ - 2 அற்புதர் உனக்குள் இருக்கின்றார் அதிசயம் செய்வார் நீ கலங்காதே - 2
2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ சுற்றத்தார் உன்னில் பகையானாரோ - 2 வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார் வலக்கரம் தாங்குவார் கலங்காதே - 2
3. மதுரமான வாழ்வு கசப்பானதோ ஒளிவரும் நேரம் இருளானதோ - 2 ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் யாவையும் செய்வார் கலங்காதே - 2
4. இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பதை போல் அழைக்கும் - 2 பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் எல்லாம் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே - 2
5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ - 2 பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே. - 2