உனக்கு எதிராய் வரும்
unakku edhiraay varum
உனக்கு எதிராய் வரும் ஆயுதம் வாய்க்காமல் போகும் எதிரே -2 நீ கர்த்தரின் பட்சத்தில் இருந்தால் உனக்கெதிரா ய் நிற்பவன் யார்-2
செங்கடலை பிரித்த தேவன் செம்மையான வழியில் நடத்துவார் -2 பொன்னைப் போல் புடமிட்ட பின்னே பொன்னாக விளங்கச் செய்யுவார் -2
அதிசயம் செய்யும் தேவன் அற்புதம் உனக்கு செய்வார் -2 ஆவியின் வரங்களை பெற்றால் அவர் சித்தம் என்னவென்று அறிவாய் -2
வருகிறேன் என்ற தேவன் வருகிறார் உன்னை அழைக்க -2 வருகையில் அவரை நீ சந்திக்க வாஞ்சையாய் இருக்கின்றாயா -2