உனக்காக பிறந்தார்
unakkaaga pirandhaar
உனக்காக பிறந்தார் உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் உரைத்திடுவாய் உலகில் -2
1.வானம் எங்கும் வீதியினில் வலம் வரும் வெண்ணிலவே வல்லவரின் புகழ் பாடவே வான் உலகில் வந்துதித்தார் -2
2.சுழன்று வரும் சூரியனே சுற்றி வந்தாய் உலகில் சுந்தரரின் புகழ் பாடவே பூவுலகில் வந்துதித்தார் -2
3.படைத்தவராம் ஆண்டவரை சிந்தையில் நிறைத்திடு நீ ஆசீர்களை நீ பெற்றிடவே ஆவியை காத்திடு நீ -2
எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார் எனக்காக உயிர்த்தார் உரைத்திடுவேன் உலகில்
உனக்காக பிறந்தார் உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் உரைத்திடுவோம் உலகில்-2