உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
un thukka naatkal mudindhu pogumae
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே உன் துயர நாட்கள் விலகி ஓடுமே உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே இயேசு உன்னோடு இருந்தால் நடக்குமே
சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும் இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும் - 2 உதிக்கும் நேரம் வரும் - உன் துக்க நாட்கள்
கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் வரும் வனாந்திரம் செழிப்பாய் ஆகும் வேளை வரும் - 2 ஆகும் வேளை வரும் - உன் துக்க நாட்கள்