உன் திருயாழில் என் இறைவா
un thiruyaazhil en iraivaa
உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் இணைத்திட வேண்டும் இசையரசே
யாழினை நீயும் மீட்டுகையில் இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் ( 2 ) யாழிசைக் கேட்டு தனை மறந்து - 2 உந்தன் ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே
விண்ணகச் சோலையில் மலரெனவே திகழ் எண்ணிலாத் தாரகை உனக்குண்டு ( 2 ) உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்