உன் திருவீணையில் என்னை ஒரு நரம்பென
un thiruveenaiyil ennai oru narambena
உன் திருவீணையில் என்னை ஒரு நரம்பென இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர்
தூசு படிந்த நரம்பு என்று என்னை வெறுத்து விடாதீர் மாசுநிறை நீதிமனிதன் என்று உம்உறவை நிறுத்தி விடாதீர் என் இயேசுவே என் தெய்வமே என்னோடு நீ பேச வேண்டும் உன் வார்த்தையில் தினம் நானும் உயிர்வாழவேண்டும் இறைவா இறைவா இறைவா இறைவா - 2
தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது சுமைதாங்கி நீதானையா ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதானையா ( 2 ) என் தலைவா என் துணைவா என் தனிமை நீ நீக்க வேண்டும் உம் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும் இறைவா இறைவா இறைவா இறைவா - 2