உன் சுகவாழ்வு சீக்கிரத்தில்
un sugavaazhvu seekkirathil
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலேசெல்லும் கர்த்தருடைய மகிமை உன்னை பின்னாலே காத்திடுமே
1.சமாதான வாழ்வு துளிர்த்திடுமே இழந்தவை அனைத்தையும் பெற்றிடுவாய் நிம்மதி அருளும் இயேசு உனக்கு பேரமைதி வாழ்வில் தந்திடுவார்
2.பெலவீனங்கள் யாவும் நீங்கிடுமே பெலனாய் நம்மை மாற்றிடுவார் தழும்புகளால் சுகம் தரும் தேவன் சுகவாழ்வை துளிர்க்க செய்திடுவார்
3.வனாந்திர வாழ்வு மறைந்திடுமே வானத்து மன்னாவால் போஷிப்பாரே வறண்ட வாழ்வை மாற்றும் இயேசு வளமான வாழ்வை தந்திடுவார்