உன் மடியில் நான் உறங்க விழிகள் மூடுவேன்
un madiyil naan uranga vizhigal mooduven
உன் மடியில் நான் உறங்க விழிகள் மூடுவேன் வாழும் யுகம் முழுவதும் உன் நினைவினில் வாழ்வேன் என்னுயிரே என் சொந்தமே
அன்னையாய் தந்தையாய் அரவணைப்பாயே சிறுபொழுது உனில் வாழும் உறவினைக் கொண்டேன் அது உயிர் வாழ்ந்த பொழுதினிலே உன்னதம் என்பேன் நன்மை செய்த நல்லவா நன்றி பூக்கள் சூட்டுவேன் - 2 கருவினில் உதித்த அன்றே உன் கரத்தில் எழுதி வைத்தாய் தவழ்ந்து நடந்தபோது என் கை பிடித்து வைத்தாய் தூசி படிந்த வீணை எனை மீட்டுகின்ற இசையே .
நேசம் கொண்ட நெஞ்சில் நிதம் வாழுகின்ற பிறையே என்ன சொல்லி போற்றுவேன் எனை மறந்து போகிறேன் உன்னை என்னும் போதிலே என்ன இழந்து போகிறேன்
காலம் முடியும் முன்னே அணைத்து பிடித்து கொண்டேன் . கலக்கம் சூழ்ந்த பொழுதும் உன் வழி நான் நடப்பேன் அச்சம் என்றுமில்லை நீ அருகில் இருக்கும் பொழுது கானும் உறவில் எல்லாம் நிதம் எந்தன் அன்பை சுவைப்பேன் - 2 உன் நினைவில் வாழுவேன் நன்றி சொல்லி பாடுவேன் என்னில் வாழும் தெய்வமே நீ நெஞ்சில் நன்றி சொல்வேன