உன் காரியங்கள் கைகூடுமே
un kaariyangal kaigoodumae
உன் காரியங்கள் கைகூடுமே என் இயேசுவின் நாமத்தினால் -(2) என் தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தால் -(2) குறைகளை எல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார் -(2) (நெஞ்சமே கலங்காதே நெஞ்சமே திகையாதே )-2
ஒன்றுக்கும் கலங்காமல் எல்லாவற்றையும் குறித்து -(2) விண்ணப்பத்தோடும் ஸ்தோத்திரத்தோடும் தேவனிடம் சொல்லிடுங்ள் -(2) (நெஞ்சமே கலங்காதே நெஞ்சமே திகையாதே )-2
வரப்போகும் இரட்சகரை எதிர்பார்த்து வாழ்ந்திடுவோம் -(2) நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு-(2) (நெஞ்சமே கலங்காதே நெஞ்சமே திகையாதே )-2
ஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்ததிரித்து போற்றிடு -(2) அவர் செய்த நன்மைகளை மறவாமல் என்றும் துதித்திடு -(2) துதித்திடு நெஞ்சமே துதித்திடு இயேசுவை-(2)