உன் தேவனை சந்திக்க நீ ஆயத்தமா
un devanai sandhikka nee aayathamaa
உன் தேவனை சந்திக்க நீ ஆயத்தமா?
1. பூமியில் யேசு வரும்போது பொல்லார் ஓடிடுவார் இந்த விதம் நீ இருந்தால் என்ன செய்திடுவாய்?
2. மேகங்களுடன் வருவே னென்று சொன்னவர் இப்போ மேகந் தனில் வரும் நேரம் கிட்டிச்சேருதே.
3. தேவ தூதரோடும் பெரும் எக்காளத்தோடும் தம் பக்தரைச் சந்திக்கும் நேரம் கிட்டிச்சேருதே.
4. அவபக்தர் அக்காலத்தில் அழுதிடுவார் அவர் வரும்போது ரட்சிப்படைய மாட்டார்.
5. பாவங்களில் ஜீவிப்பவர் பதுங்கிடுவார் பரிசுத்த மாக்கப்பட்டோர் பறந்திடுவார்.
6. இரக்கமுள்ள் இந்த நாளில் மனந்திரும்பு இந்நேரமே ஏற்றுக்கொண்டு மன்னிப்புப்பெறு.
7. உனக்காய் மரித்த யேசு காத்து நிற்கிறார் யேசு உன்னைப் பட்சமாக ஏற்றுக்கொள்ளுவார்.
8. பரனை ஏற்றுக் கொள்ளாதோர் அந்த நாளிலே பதுங்கி நித்தயமாகப் பரிதபிப்பார்.