உம்மோடு சேர்ந்து உம் மார்பில் சாய்ந்து
ummodu serndhu um maarbil saayndhu
உம்மோடு சேர்ந்து உம் மார்பில் சாய்ந்து எந்நாளும் உம்மை பார்க்கணுமே உம் வார்த்தை கேட்டு உம் கைகள் கோர்த்து உம் பிள்ளையாக மாறனுமே
ஆராதனை ஆராதனை - 2
1. உம் தெளிவான அன்பு சிலுவையில் பார்த்தேன் உலகத்தின் அன்பு அது பொய் ஆனதே -2
என் நண்பனே நீர் நல்லவர் என் நண்பனே நீர் வல்லவர் - 2
2. என் பாவங்களை போக்கி சாபங்கள் நீக்கி புதிதான வாழ்க்கையை அருளினீரே -2
என் நேசரே நீர் நல்லவர் என் நேசரே நீர் வல்லவர் - 2
3. உம் பரிசுத்த ஆவி என் கைகள் கோர்த்து என்னோடு சொன்னார் வா வா அன்பே - 2
என் மேய்ப்பரே நீர் நல்லவர் என் மேய்ப்பரே நீர் வல்லவர் - 2