உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
ummodu selavidum ovvoru nimidamum
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா – என்னை பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம் ஆகாயம் கொண்டு செல்லுதே
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகிறார்களே பூமியிலே மண்ணான நான் – உம் நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா
தாயனவள் தன் பாலனை மறந்தாலும் என்னை மறவாதவரே தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா
என் இயேசுவே உம் ஆவியால் ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள நாள் வரையில் உழைக்கணுமையா