உம்மோடு ஒரு பொழுது
ummodu oru pozhudhu
உம்மோடு ஒரு பொழுது தனித்திருக்க என் உள்ளமெல்லாம் ஏங்குதய்யா உறங்காமல் பலமணிநேரம் உம்மோடு பேசிட வேண்டும்
உம் வார்த்தை வேண்டும் உம் தயவு வேண்டும் 2 (அதற்கு) உம் கிருபையே போதும் ஐயா என்னை பெலவானாய் மாற்றுதய்யா
1. உம்மோடு நெருங்கிட வேண்டும் உம் சித்தம் அறிந்திட வேண்டும் என் வாழ்நாளெல்லாம் (உம்) பாதம் அமர்ந்து உம் வசனமே கேட்டிட வேண்டும்
2. தரிசனம் நிறைவேற்ற வேண்டும் வழி மாறாமல் செயல்பட வேண்டும் இவ்வுலகத்தின் பாடுகள் மாய்மாலங்கள் தடை செய்யாமல் முன் செல்லவேண்டும்
3. உம்மிலே நிலைத்திட வேண்டும் நான் தவறாமல் கனி தரவேண்டும் நான் சோர்ந்திடாது நன்மைகள் செய்ய உம் அன்பாலே நிரம்பிட வேண்டும்