உம்மோடு நெருங்க
ummodu nerunga
உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன் உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்
மாற்றுமே என்னை மாற்றுமே உம் சாயலாய் என்னை மாற்றுமே -2
1. மலை மேல் உள்ள பட்டணமாய் ஒளி கொடுக்கும் தீபமாய் பயனுள்ள பாத்திரமாய் என்னை நீர் மாற்றுமே
2. பரிசுத்த ஆவியே தேற்றரவாளனே உலகத்தின் முடிவுவரை என்னோடு இருப்பவரே
3. ஒதுக்கப்பட்ட என்னையும் தேடி வந்து தெரிந்து கொண்டீர் தேவையான கிருபைகளை தினமும் எனக்கு தாருமே