உம்மிடம் நான் ஒன்றை கேட்டேன்
ummidam naan ondrai ketten
உம்மிடம் நான் ஒன்றை கேட்டேன் தாமதம் என்னை தடுமாற செய்ததே-2 உம் பிரியம் என்ன நோக்கம் என்ன புரியாததால் மறக்க துணிந்தேன் ஜெபிக்க மறுத்தேன் நம்பிக்கை இழந்தேன் நீர் என்னோடிருப்பதை அறியாமல் நன்றி மறந்தேன் யாவும் வெறுத்தேன் பிரிய துடித்தேன் உம் உறவின் ஆழம் புரியாமல்
நான் விழுவேன் என்று ஆயிரம் பேர் நினைக்க முன் நோக்கி சென்றேன் உம் கிருபையால் எனக்கு புறம்பாக ஆயிரம் பேர் பேச நீர் ஒருவர் மட்டும் ஆதரவானீர் நான் நினைத்ததற்கும் மேலாக என் வாழ்வில் செய்தீரே உம்மை விட்டு எங்கு செல்வேன் இருந்தாலும் மரித்தாலும் உம் பின்னே வருவேன்-3