உம்மையன்றி யார் வருவார்
ummaiyandri yaar varuvaar
உம்மையன்றி யார் வருவார் எனக்கு உதவிடவே உந்தன் அன்பை யார் தருவார் இந்த உலகத்திலே அன்பின் வடிவே எங்கள் அடைக்கலமே - 2 ஆறுதலை அளித்திடும் எந்தன் இயேசுவே - 2
1. பாதைமாறிப்போன ஆடு புதருக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்குது தனிமையிலே - 2 மேய்ப்பன் இல்லாத ஜீவனுக்கும் மீட்பராகவே இயேசு வந்தார் - 2 அவர் உன்னதத்தின் தேவன் என்றும் உண்மையுள் தேவன் - 2 கண்ணுரக்கம் இன்றி நம்மை காத்திடுவார்
2. ஆத்துமாவே நீயும் ஏன் கலங்குகின்றாய் ஆண்டவரை அழைத்திடு பெலன் தருவார் - 2 பாவத்தின் சம்பளம் மரணம் என்றார் பாவிகளை மீட்க இயேசு வந்தார் - 2 அவர் நித்தியத்தின் தேவன் வேத சத்தியத்தின் தேவன் - 2 வாதை உன்னை அணுகாமல் காத்திடுவார்