உம்மையே நம்புவேன்
ummaiyae nambuven
உம்மையே நம்புவேன் உம்மையே சேவிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் ...
பல்லவி
என் இயேசுவே என் தேவனே உம்மை ஆராதிப்பேன் என் மீட்பரே ..பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்.. - 2
பல்லவி
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2
1. கல்வாரியின் இரத்தத்தால் என் பாவங்களை கழுவினீரே என்னை மாற்றினீரே உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2
பல்லவி
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2
2. உம்மைவிட்டு தூரம் நான் சென்றபோதும் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அணைத்துக்கொண்டீர் உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2
பல்லவி
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2
பல்லவி
என் இயேசுவே என் தேவனே உம்மை ஆராதிப்பேன் என் மீட்பரே ..பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்.. - 2
பல்லவி
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2