உம்மையே நம்பி வந்த எனக்கு
ummaiyae nambi vandha enakku
உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாருமில்லை உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே புகலிடம் - 2
நீரே -3 அடைக்ககலம் நீரே -3 புகலிடம்
1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே தனிமையில் நடந்திடும் பாதையிலே -2 நம் துணையாய் நமது தேவன் நம்மை சுமந்து காத்திடுவார் -2
2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2 அதிசயங்கள் செய்யும் தேவன் என் அருகே நடந்து வந்தீர் -2
3. உமக்காய் பறக்க நினைக்கையிலே சிறகை முறிக்கும் உலகத்திலே -2 புது சிறகை முளைக்க செய்து என்னை உயரே எழுப்புகிறீர் -2