உம்மையே நான் பற்றிக்கொள்வேன்
ummaiyae naan patrikkolven
உம்மையே நான் பற்றிக்கொள்வேன் எந்தன் உயர்ந்த அடைக்கலமே என்னையே நான் அர்ப்பணிக்கிறேன் உந்தன் சித்தமதை செய்திடவே
மாற்றங்களை தருபவரே நீர் என்றும் மாறாதவர் எப்போதும் காண்பவரே நீர் காணக்கூடாதவர்
சீயோனின் ஆறுதலே இஸ்ரவேலின் ஜெய பலனே எனக்காக ஜீவன் தந்தீர் உமக்காக வாழ்ந்திடுவேன்
குறைவெல்லாம் நிறைவாக்குவீர் கண்ணீரெல்லாம் களிப்பாக்குவீர் பேதைக்கு வெளிச்சம் நீரே பாதைக்கு தீபம் நீரே