உம்மைப்போல யாரும் இல்லை
ummaippola yaarum illai
உம்மைப்போல யாரும் இல்லை உம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்லுவேன் எனக்காக யாவையும் செய்திடும் உம் அன்பை எண்ணியே பாடுவேன்
பல்லவி
நீரே நீரே எல்ஷடாய் தேவன் என்னை காக்கும் எல்ரோயி இம்மானுவேலர்
உம்மை போலவே யாரும் இல்லையே நேசித்தென்னையும் வழிநடைத்தவே இருள் சூளும் நேரங்களிலும் உந்தன் நாமத்தை நம்புவேன்
எந்தன் கால்கள் சறுக்கும் போது பாதை தெரியாமல் தவிக்கும் போது உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர் உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்
நீரே நீரே யெகோவா ரூவா என்னை நடத்தி கரை சேர்க்கும் என் நல்ல தேவா
பல்லவி
நீரே நீரே எல்ஷடாய் தேவன் என்னை காக்கும் எல்ரோயி இம்மானுவேலர்