உம்மைப்போல மாறிடா
ummaippola maaridaa
உம்மைப்போல மாறிடா ஆசை ஏசையா உம்மைப்போல மாறிட ஆசை இந்த உலகம் என்னை இழுக்குது உந்தன் கிருபையோ என்னை தாங்குது
நீதியின் வழியில் செல்வதால் நீதி தேவன் நீர் துணையிருப்பீர் பாவத்திலே நான் வாழ்ந்து விட்டால் படுகுழியில் என்னை தள்ளி போடுவீர்
காரிருளில் நடந்தலைந்தேன் கர்த்தர் என்னை மீட்டுக் கொண்டீர் உம்மை போல என்னை மாற்றி உலகத்திற்கு ஒளியாய் வைத்தீர்
ஒளியினிலே நடந்திடுவேன் உலகத்தையே ஜெயித்திடுவேன் உத்தமரே உம் வழியில் சென்று ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்