உம்மைப்போல் நல்ல சிநேகிதன்
ummaippol nalla sinegidhan
உம்மைப்போல் நல்ல சிநேகிதன் யாருமில்லை பூவினில் உம்மைப்போல் அன்பு காட்டிட யாரும் இல்லையே
என் தாயைப் போல தேற்ற என்தந்தைப் போல் அணைக்க என் சிநேகிதன் போல் என்னை நேசிக்க யாருமில்லையே
பலமுறை பாவத்தில் நான் ஆழ்ந்திட்ட போதும் உம் கரம் நீட்டி என்னை தூக்கி விட்டீர் ஆனாலும் என்னை புறம்பே தள்ளவில்லை அதுவே உம் அன்பின் ஆழமே
உதவுவார் யாருமின்றி கலங்கின வேளை உற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள் திகையாதே நான் உன் தேவன் என்வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர்