உம்மைப் போல் யாருண்டு தேவா
ummaip pol yaarundu devaa
உம்மைப் போல் யாருண்டு தேவா உம் துணையின்றி வாழ்வில்லை நாதா எனக்காக பலியாகும் தெய்வம் என்னோடு உறவாடும் தெய்வம் வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீயே - என் உறவும் நீயே
அப்பத்தின் வடிவினிலே - தன்னை உணவாக தருகின்றார் நாம் வாழ தன் வாழ்வையே - தேவன் பலியாக தருகின்றார் உயிர் வாழும் நாளெல்லாம் உமை பாடுவேன் உமக்காக வாழ்ந்து - உம் புகழ் சாற்றுவேன்
வானினின்று இறங்கி வந்த - அன்பின் உயிருள்ள உணவிதுவே இதை உண்போர் சாவதில்லை - என்றும் நிலைவாழ்வை அடைந்திடுவர் கிறிஸ்துவ வாழ்வில் நற்கருணை உச்சியும் மையமுமாகிறது