உம்மைப் பற்றிக் கொள்கிறேன்
ummaip patrik kolgiren
உம்மைப் பற்றிக் கொள்கிறேன் உம்மைப்பாடிப் போற்றுவேன் உம்மை பணிந்து தொழுகிறேன் பரலோக தந்தையே
1.கோடானகோடி தூதர்கள் உம்மை ஓய்வின்றி துதிக்கிறார்களே உம்முடைய பிள்ளை நானய்யா உம்மை ஓய்வின்றி துதிக்கிறேனைய்யா
2. ஆபிரகாம் ஈசாக்கெல்லாம் உம்மை ஆராதித்து மகிழ்ந்தார்களே மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றேன் என்னை புகழ்ச்சியோடு வைப்பீரைய்யா
3.அக்கினியில் போட்டார்களே அப்பா நீங்க வந்தீங்களே அக்கினி அழிக்கவேயில்லை - உங்க அன்பினால் காத்தீங்களே
4 ஆதி சபை மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெபித்தார்களே ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறோமைய்யா உம் அரசு வரவேண்டுமே.
5. ஆராய்ந்து அறிபவரே என் ஆற்றலாய் உள்ளவரே ஆயுள் எல்லாம் அன்பு கூருவேன் உங்க அருகில் ஆடிப்பாடுவேன்
6. வானம் உம் சிங்காசனம் பூமி உங்க பாதப்படி பாதம் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன் உங்க பாதையிலே நடந்து செல்கிறேன்