உம்மை விட்டா யாரும்
ummai vittaa yaarum
உம்மை விட்டா யாரும் இல்ல இயேசையா உம்மை விட யாரும் இல்ல இயேசையா - 2
நீங்க போதும் எனக்கு (2) நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு – 2
ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2 என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்துக் கொண்டாலும் என் தலையை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2
பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உண்டுபண்ணும் தேவன் நீரிருக்க (எனக்கிருக்க) கானானின் பயணத்திற்கு தடையில்லையே - 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடரச்செய்வீரே - 2
கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே - 2 என் கோலை துளிர்க்கச் செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லயே - 2