உம்மை விட வேறு யாரிடம்
ummai vida veru yaaridam
உம்மை விட வேறு யாரிடம் பின்னே செல்வேனையா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதையா-2
வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ-2 எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2
உறவுகளோ பிரிவுகளோ தனிமையோ தவிப்புக்களோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2
பணம் இல்லையோ பொருளில்லையோ உடையில்லையோ உணவில்லையோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2
உயர்வுகளோ தாழ்வுகளோ ஐசுவரியமோ ஆஸ்திகளோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2