உம்மை விட நான்
ummai vida naan
உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன் ஆதரவாய் வந்தே கரம் பிடித்தே நடத்தி சென்றீர் உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்(2)
அன்புக்காய் ஏங்கி நின்றேன் அணைத்தீரே நன்றி அய்யா(2) மனிதர் அன்பு மாறிப் போகும் மாறாதென்றும் உந்தன் அன்பு
திக்கற்றே இருந்தேனே கரம் பிடித்தீர் நன்றி அய்யா என் மேல் உந்தன் கண்கள் வைத்து ஆலோசனை எனக்கு தந்தீர்
பேதையாய் நான் அலைந்தேன் கண்டீரே நன்றி அய்யா நானே உம்மை அறியவில்லை என்னைத் தேடி வந்தீரே
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F A# Dm Dm C Dm F A# Dm Dm C Dm C Gm Dm Dm C Dm C Gm Dm Dm C Dm C Gm Dm