உம்மை வாழ்த்தி தொழுவோம்
ummai vaazhthi thozhuvom
உம்மை வாழ்த்தி தொழுவோம் உள்ளம் நிறைந்தே போற்றுவோம் எல்லையில்லா தொல்லையில் இயேசுவே எங்களைக் காத்தீரே
பாவப் பாரில் நாங்களும் பார்த்தாலே நிறைந்தோமே கோர வியாதித் தொல்லையில் காத்த தயவை நினைத்தே
அன்பில்லாத மாந்தரால் வம்பு வழக்குகள் வந்ததே இன்ப இயேசு நாமத்தால் இனிய சொல்லால் வென்றோமே
தேவை யெல்லாம் சந்திப்பீர் தேற்றரவாளன் நீர் அல்லவோ பேதையை ஞானியாய் மாற்றியே பாரினில் புகலிடம் தாருமே