உம்மை துதிப்பேன் உம்மை
ummai thudhippen ummai
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் இயேசுவே ஆண்டவரே உம்மைத் துதிப்பேன்
பிதாவின் மகனே உம்மைத் துதிப்பேன் இஸ்ரவேலின் மாட்சிமையே உம்மைத் துதிப்பேன் நீதியின் சூரியனே உம்மைத் துதிப்பேன் உலகின் ஒளியே உம்மைத் துதிப்பேன்
தேர்ந்தெடுத்த இயேசுவே உம்மைத் துதிப்பேன் நீதிமானின் தந்தையே உம்மைத் துதிப்பேன் நசரேத்தூர் இயேசுவே உம்மைத் துதிப்பேன் நற்கருணை நாதரே உம்மைத் துதிப்பேன்
கடவுளின் தூய்மையே உம்மைத் துதிப்பேன் கடவுளின் ஞானமே உம்மைத் துதிப்பேன் கடவுளின் செம்மறியே உம்மைத் துதிப்பேன் கடவுளின் கொடையே உம்மைத் துதிப்பேன்