உம்மை துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
ummai thudhippen karthaadhi kartharae
உம்மை துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே உம் கிரியைகள் அதிசயமானது! உம்மை துதிப்பேன் தேவாதி தேவனே உம் ஆலோசனைகள் அருமையானது!
1. என்னை ஆராய்ந்து அறிந்து இறுக்கிறார் என் நினைவுகளும்! - தூரத்தில் அறிவீர்! என் நாவினில் சொல் பிறவா முன்னமே என் தேவனே அவை யாவும் அறிவீர்!
2. உமக்கு மறைவாக இருளும் மூடாதே இரவும் பகலைப் போல் வெளிச்சமாகுதே உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் இந்த அறிவு ஆச்சரியமானது
3. என்னைச் சோதித்துப் அறிந்து கொள்ளும் வேதனை வழி என்னின்று அகல் நித்திய வழி என்னை நடத்தும் எந்தையே எந்தன் உள்ளம் பாடிட