உம்மை போல ஒரு தெய்வம்
ummai pola oru theyvam
உம்மை போல ஒரு தெய்வம் இதுவரை கண்டதில்லையே உம்மை போல ஒரு ராஜன் இதுவரை பார்த்ததில்லையே ஆராதனை செய்கிறோம் நாங்கள் ஆராதனை செய்கிறோம்
1. பறந்து காக்கும் பச்சியை போல இதுவரையில் காத்தவர் நீரே எங்கள் ஆதரவாய் இருந்து (தீர்) தப்புவித்து விடுதலை தந்து விட்டீர் (ஆராதனை செய்கிறோம் )
2 . காற்றையும் நாங்கள் காணவும் இல்லை மழையின் சத்தத்தை கேட்கவும் இல்லை வெட்டின பள்ளத்தாக்கு வழிந்தோடுதே நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் நிறைவேறுதே (ஆராதனை செய்கிறோம்)
3. தாயானவள் தன் பாலகனை மறந்தாலும் நீர் மறப்பதில்லை தகப்பனைப் போல சுமந்தவரே இதுவரை சுமந்தீர் சுமந்திடுவீர் (ஆராதனை செய்கிறோம்)