உம்மை போல தேவன்
ummai pola devan
உம்மைப் போல தேவன் யாருண்டு உம்மைப் போல் ராஜா யாருண்டு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2
என்னைக் காண்பவர் நீர்தானையா என்னைக் காப்பவர் நீர்தானையா என்னை நடத்துபவர் நீர்தானையா என்னைப் போஷப்பவர் நீர்தானையா
சமாதானம் தருபவர் நீர்தானையா சந்தோஷம் தருபவர் நீர்தானையா சாபத்தை மாற்றுபவர் நீர்தானையா சம்பத்தை தருபவரும் நீர்தானையா
வானத்தை உமது வார்த்தையினால் பூமியை உமது செயல்களினால் படைத்த தேவன் நீரல்லவோ பாதுகாப்பவர் நீரல்லவோ