உம்மை போல் யாருமில்லையே
ummai pol yaarumillaiyae
உம்மை போல் யாருமில்லையே இரட்சகரே என் இயேசுவே ஜீவன் தந்து மீட்டவரே உயர்ந்தவரே என் தேவனே பரத்தில் என்னை சேர்ப்பவரே
உம்மை போல் யாருமில்லையே என் இயேசுவே உம்மை போல் யாருமில்லையே
தேவனின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாயிருப்பேன் தேவனை அண்டினேன் குறைவில்லையே உம்மை நாடினேன் பயமில்லையே
கன்மலை வெடிப்பினில் கரங்களால் மூடி உமது நேசத்தை காட்டிடுமே நேசரை தேடினேன் கண்டுகொண்டேன் உமது நேசத்தால் திருப்தியாவேன் நேசரை தேடினேன் கண்டு கொண்டேன் நேசரின் நேசத்தால் திருப்தியாவேன்