உம்மை போல் யாரும் இல்லையே
ummai pol yaarum illaiyae
உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே
வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2
செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர் இஸ்ரவேலின் தேவனானவர்
எரியும் அக்கினியில் தள்ளினாலும் சிங்கத்தின் வாயருகே நின்றாலும் அக்கினி அணுகவில்லை சிங்கம் சீறவில்லை தானியேலின் தேவனானவர்
வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லையே வழி தவற என்னை விடவும் இல்லையே