உம்மை போல் நல் நேசருண்டோ
ummai pol nal nesarundo
உம்மை போல் நல் நேசருண்டோ உன்னதர் நீர் அல்லவோ கர்த்தரின் அன்பை நினைக்கும் போது எந்தன் கவலைகள் மாறிடுதே
1. கல்வாரி சிலுவை நோக்கிடும் போது கல்மனம் கலங்கிடுதே பரிசுத்தர் போற்றும் பரம ராஜன் என் பாவங்கள் நீக்கினார்
2. நான் ஒரு கழுதை நீரோ என் தேவன் நான் உமதடிமையல்லோ வழி நடத்தும் என் அருமை நாதரே வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்
3. நேசரின் அன்பு அறிந்திடும் போது நெஞ்சம் நெகிழ்ந்திடுதே இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை என்றென்றும் துதித்திடுவேன்
4. என் இயேசு ராஜன் வருகையின் போது எக்காளம் தொனித்திடுதே நீதியின் நடத்தும் நல்ல மேய்ப்பன் நிச்சயம் சேர்ந்திடுவேன்