உம்மை பாட கோடி
ummai paada kodi
உம்மை பாட கோடி நாவுகள் போதாதையா உம்மை போற்ற கோடி ஆன்மாக்கள் போதாதையா-2 உம்மை உயர்த்த உம்மை துதிக்க இரத்த அணுக்களெல்லாம் துடிக்குதய்யா-2 உம்மை பாட........
1.உம் அன்பை வெளிக்காட்ட உலகில் வந்தீர் உம் இரக்கம் அறிந்திட தாழ்மை ஏற்றீர்-2 உம் வரவால் என் வாழ்வை புதுப்பிக்கத்தானே தெய்வம் நீர் தாழ்மை ஏற்றீர் ஆ..ஆ..அ..தெய்வம் நீர் தாழ்மை ஏற்றீர்-உம்மை பாட
2.இம்மானுவேலனை புகழ்கின்ற நாம் பாலனான இயேசுவை துதிக்கின்ற நாம்-2 ஞாயாதிபதியாக வரப்போகும் கர்த்தரை நம் வாழ்வில் மறந்ததென்ன ? ஆ..ஆ..அ..நம் வாழ்வில் மறந்ததென்ன ?-உம்மை