உம்மை நோக்கி கூப்பிடும்
ummai nokki kooppidum
உம்மை நோக்கி கூப்பிடும் ஒரு நொடியும் என்னை தள்ளாமல் செவி சாய்க்கும் தேவனே உம்மையே நான் நம்புவேன்
உம் கிருபையால் மகிழ்கிறேன் ஒரு நொடியும் உம்மை விடாமல் என் கன்மலை கோட்டையும் துருகமானீரே
பல்லவி
மலையில் நான் நொந்து அழுதால் காலையில் ஆனந்தமே துன்பத்தால் நானும் புலம்பினால் ஆனந்த களிப்பை மாற்றுவீர்
உம் கோபம் ஒரு நிமிடம் தான் உம் தயவோ வாழ்நாள் முழுவதும் நிந்தனையின் மத்தியில் என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீர்
பல்லவி
மலையில் நான் நொந்து அழுதால் காலையில் ஆனந்தமே துன்பத்தால் நானும் புலம்பினால் ஆனந்த களிப்பை மாற்றுவீர்