உம்மை நங்கள் நோக்கி
ummai nangal nokki
உம்மை நாங்கள் நோக்கிப்பார்க்க உம்மை நாங்கள் ஆராதிக்க ஒற்றுமையாய் கூடி வந்தோம் ஒரு மனதாய் பாடுகிறோம் ஒரு மனதாய் பாடுகிறோம்
மேல் வீட்டறையினிலே மேலான துன்பத்திலே கால் பதித்து நின்றவர்மேல் கருணை மழை பொழிந்தவரே ஊழ்வினைகள் செய்வினைகள் உருவேற்றும் மந்திரங்கள் செயலிழக்கச் செய்யுமைய்யா - என்னை அக்கனியால் நிரப்புமையா
உலகத்தின் அதிபதிக்கு உறைவிடம் என்னில் இல்லை கலகத்தார் கூட்டத்தோடு ஐக்கியம் எனக்கில்லை பாரம்பரியம் சடங்காச்சாரம் பாதகரின் மாய வலையை அழித்தெறிய வாருமையா - என்னை அக்கினியால் நிரப்புமையா
அஞ்சனம் பார்ப்பதில்லை, குறிசொல்லல் கேட்பதில்லை நெஞ்சிலே விசுவாசம் நான் கேட்பது கிடைத்துவிடும் வாஸ்து மனை சாஸ்திரங்கள் அதிஷ்ட எண்ணின் அலங்கோலங்கள் அழித்திட வாருமைய்யா - என்னை அக்கினியால் நிரப்புமையா